சொடக்குத் தக்காளி தாவரவியல் பெயர் : Physalis minima L. குடும்பம் :Solanaceae வளரிடம் : இந்தியாவின் மிதமான வெப்ப மண்டலப் பகுதிகளிலும், தரிசு நிலங்கள் மற்றும் வேலிகளின் ஓரங்கள், சாலையோரப் பகுதிகள் ஆகியவற்றில் பரவலாகக் காணப்படுகிறது. வளரியல்பு : சிறு செடி, இலைகள் நீள் வட்ட முட்டை வடிவானவை. விளிம்புகள் கரடுமுரடான பற்கள் போன்று மிகச் சிறிய மடல்களானவை. புல்லி மடல்கள் முக்கோணமானவை, கூர் நுனி படிந்த மென் – உரோமங்கள் உண்டு. அல்லிகளின் குறுக்களவு 5 மி.மீ பெர்ரிகுறுக்கள் 0.7 செ.மீ கனியை மூடிய புள்ளிகள், 1.5 செ.மீ மலர்கள் 11-12 (சமவெளி) 7-10 (மலைகள்) கனிகள். மருத்துவப் பயன்கள:
இக்கனி வயிற்றுப்பூச்சியைக் கொல்லும் தன்மையுடையது. மலம்
நீக்குதல், பசியைத் தூண்டுவிக்கும். அஜீரணத்தைப் போக்கும் குணமுடையது. |